இறக்காமம் பிரதேச சபைத் தவிசாளர் ஜெமீல் காரியப்பருக்கெதிரான குற்றச்சாட்டுக்கள் அடங்கிய மகஜர் கிழக்கு ஆளுநர் அனுராதா யஹம்பத்திடம் சமர்ப்பிக்கப்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பான மகஜர் ஒன்றை தேசிய காங்கிரஸ் கட்சியின் இறக்காமம் பிரதேச அமைப்பாளர் சட்டத்தரணி கே எல் சமீம் ஆளுநரின் பிரத்தியேகச் செயலாளர் திரு.சாலுகவிடம் நேற்று (30) கையளித்துள்ளார்.
குறித்த மகஜரில் அரசின் அபிவிருத்தித் திட்டங்களை நடை முறைப்படுத்துவதில் தடை ஏற்படுத்தி வருகின்றமை, மற்றும் கடந்த பத்து மாதங்களாக சபை நிதி வீணடிக்கப்பட்டுள்ளமை தொடர்பாகவும் குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பிலான சட்ட நடவடிக்கையை துரிதப்படுத்துமாறும் வலியுறுத்தியுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1