25.7 C
Jaffna
December 28, 2024
Pagetamil
இலங்கை

வேலணை பிரதேச சபை விசேட அமர்வில் அமைதியின்மை; நடந்த தவறுக்கு மன்னிப்பு கோரினார் தவிசாளர்

யாழ்ப்பாணம் – வேலணை பிரதேச சபை விசேட அமர்வில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வசமுள்ள, வேலணை பிரதேச சபை விசேட அமர்வு நேற்று (28) தவிசாளர் நவசிவாயம் கருணாகரகுருமூர்த்தி தலமையில் இடம்பெற்றிருந்தது.

பிரதேச சபைக்கு சொந்தமான வேலணை வங்களாவடி கடைத்தொகுதியின் வேலைகளை முன்னெடுப்பதற்கு சபையின் நிலையான வைப்பில் இருக்கும் நிதியினை மீளப்பெறுவதற்கு சபை உறுப்பினர்களிடம் அனுமதியினை பெற்றுக் கொள்ளுவதற்காகவே இன்றைய விசேட கூட்டம் கூட்டப்பட்டிருந்தது.

இதன்போது சபையின் தற்போதைய ஆட்சியாளர்களின் அசமந்த போக்கு காரணமாகவே வேலைகள் இதுவரை நிறைவடையவில்லை என உறுப்பினர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தனர்.

தொடர்ந்து உறுப்பினர்களின் குற்றச்சாட்டுகளை எற்றுக்கொண்ட தவிசாளர் நடந்த தவறுக்கு மன்னிப்பு கோரியதை அடுத்து நிலையான வைப்பில் உள்ள நிதியினை மீளப்பெறுவதற்கு அனைத்து உறுப்பினர்களும் ஏகமனதாக அனுமதி வழங்கியிருந்தனர்.

இரண்டு கட்டங்களாக கட்டுமான பணிகளை முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டு அதில் முதலாவது கட்ட வேலைகள் கடந்த மாதம் 28 ஆம் திகதி நிறைவடையும் என கூறப்பட்ட போதும் இன்றுவரை நிறைவடையாமல் இருக்கின்றது.

நாட்டில் ஏற்பட்டுள்ள விலையேற்றம் காரணமாகவே வேலைகளை முழுமையாக முடிப்பதில் தாமதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்ட போதும் அதனை சில உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்ளாததால் சபையில் அமைதியின்மை ஏற்றட்டிருந்தது.

இன்றைய சபை அமர்வுக்கு ஊடகவியலாளர்கள் சென்றபோது விசேட அமர்வுகளுக்கு ஊடகவியலாளர்களை அனுமதிக்க முடியாது என தவிசாளர் உள்ளிட்ட சில உறுப்பினர்கள் கூறியிருந்தார்.

தவிசாளரின் கருத்துக்கு உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

போக்குவரத்து விதிமீறல்: 383 சாரதிகள் மீது வழக்கு பதிவு

east tamil

‘மக்களுக்கு எதிராக செயற்பட்ட அரச அதிகாரிகளுடன் போராடிக்கொண்டிருக்கிறோம்’: அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி

Pagetamil

மஹிந்தவின் வலது கையிடம் நேற்று: மகனிடம் 3ஆம் திகதி விசரணை!

Pagetamil

இலஞ்சம் வாங்கியபோது மாட்டிய முன்னாள் மாகாணசபை உறுப்பினருக்கு விளக்கமறியல்!

Pagetamil

மனுஷ நாணயக்காரவின் சகோதரர் கைது

Pagetamil

Leave a Comment