பேருந்து கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பான இறுதித் தீர்மானம் இன்று அறிவிக்கப்படவுள்ளது.
தனியார் பேருந்து உரிமையாளர்கள் இன்று மாலை போக்குவரத்து அமைச்சின் அதிகாரிகள் மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிகாரிகளை சந்தித்து பேருந்து கட்டண திருத்தம் தொடர்பில் கலந்துரையாடவுள்ளனர்.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் சசி வெல்கம, தேசிய பேருந்து கட்டணக் கொள்கையின்படி பேருந்து கட்டண திருத்தம் ஏற்கனவே தொகுக்கப்பட்டுள்ளது என்றார்.
அண்மைக்காலமாக அதிகரித்துள்ள எரிபொருள் விலைக்கு ஏற்ப பேருந்து கட்டணத்தை மாற்றியமைக்க வேண்டும் என பேருந்து உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளதுடன் குறைந்தபட்ச பேருந்து கட்டணமான 14 ரூபாயை 20 ரூபாவாகவும் ஏனைய பேருந்து கட்டணங்களை 20 – 25 வீதத்தினால் அதிகரிக்கவும் முன்மொழிந்துள்ளனர்.
இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன கருத்துத் தெரிவிக்கையில், தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மீள்திருத்தத்தை முன்மொழிந்துள்ள சதவீதங்கள் உட்பட மூன்று விடயங்கள் குறித்து கலந்துரையாடப்படும். பேருந்து கட்டண திருத்தமானது நியாயமானதாகவும், பொதுமக்களுக்கு சுமையை ஏற்படுத்தாது எனவும் தெரிவித்துள்ளார்.
தனியார் பேருந்து தொழிற்துறையை நிலைநிறுத்துவதற்கு இந்த அதிகரிப்பு தவிர்க்க முடியாதது என அவர் தெரிவித்துள்ளார்.