தற்போதைய அரசாங்கம் நாட்டின் பொருளாதாரத்தை வெற்றிகரமாக அழித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார, அத்தியாவசியப் பொருட்கள், மருந்துப் பொருட்கள் மற்றும் பால் மாக்களை இறக்குமதி செய்வதற்கு நாட்டில் டொலர் கையிருப்பு இல்லை எனவும் அமைச்சர்கள் பொழுதுபோக்கிற்காக வெளிநாடுகளுக்குச் செல்வதாகவும், வெளிநாட்டு பயணத்திற்கு அவர்களுக்கான டொலர்கள் எப்படி கிடைத்தது என்றும் கேள்வி எழுப்பினார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் பொதுமக்கள் தொடர்ச்சியாக துன்பங்களை அனுபவித்து பட்டினியால் வாடினர். ராஜபக்சக்கள் ஏராளமான கடன்களை பெற்று உலகிற்கே கடனாளிகளாக உள்ளனர் என்று அவர் கூறினார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1