24.9 C
Jaffna
February 4, 2025
Pagetamil
உலகம்

கொரோனா தொற்று காலத்தில் 1 பில்லியன் டொலர் வசூலை கடந்த முதலாவது திரைப்படம்!

உலகளாவிய பொக்ஸ் ஒபிஸில் 1 பில்லியன் டொலருக்கு மேல் வசூலித்த முதல் தொற்றுநோய் காலத் திரைப்படமாக ‘Spider-Man: No Way Home’  மாறியுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகை கொரோனா தொற்று பாதித்துள்ள நிலையில், இந்த காலப்பகுதியில் முதன்முறையாக ஒரு பில்லியன் டொலர் வசூலித்த திரைப்படமாக ‘Spider-Man: No Way Home’ உருவெடுத்துள்ளது.

கொரோனா சூழலில் திரைப்படத்துறை கடுமையான பாதிப்புக்கு உள்ளான நிலையில், புதிய ‘Spider-Man’ திரைப்படம் சாதனை படைத்துள்ளது.

திரைப்படம் வெளியான முதல் 12 நாள்களில் 1 பில்லியன் டொலர் வசூலானது.

வட அமெரிக்காவில் 467.3 மில்லியன் டொலரையும், அனைத்துலக அளவில் 587 மில்லியன் டொலரையும் படம் வசூலித்தது.

மீடியா தரவு பகுப்பாய்வு நிறுவனமான காம்ஸ்கோரின் கூற்றுப்படி, 2019 ஆம் ஆண்டின் ஸ்டார் வோர்ஸ்: த ரைஸ் ஒஃப் ஸ்கைவால்கர் திரைப்படம்தான் 1 பில்லியன் டொலருக்கும் அதிகமாக வசூலித்த கடைசி திரைப்படம். அதன் பின்னர் இப்பொழுது Spider-Man: No Way Home திரைப்படம் அந்த இலக்கை எட்டியுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அமெரிக்க கைதிகளை நரகத்திற்கு அனுப்பும் திட்டம்

east tamil

மொஸ்கோவில் குண்டு வெடிப்பு : 4 பேர் பலி

east tamil

“Nudeify AI” தொழில்நுட்பங்களுக்கு தடையுத்தரவு

east tamil

போர் நிறுத்தத்தை மீறி இஸ்ரேல் தாக்குதல்

east tamil

சூடானில் 54 பேர் பலி

east tamil

Leave a Comment