ஆழிப்பேரலையால் காவுகொள்ளப்பட்டவர்களின் 17ஆம் ஆண்டு நினைவேந்நல் முல்லைத்தீவு சுனாமி நினைவாலயத்திலும் ,கள்ளப்பாடு மைதானத்திலும் ,புதுக்குடியிருப்பு சுனாமி நினைவாலயத்திலும் 26.12.2021இன்றைய தினம் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.
உயிரிழந்தவர்களின் உறவுகள் கதறி அழுது கண்ணீர் மல்க, தமது உயிரிழந்த உறவுகளுக்கு மலர் தூவி, தீபமேற்றி உணர்வுபூர்வமாக அஞ்சலிகளை மேற்கொண்டனர்.
அதேவேளை உயிரிழந்தவர்களின் ஆத்மசாந்திவேண்டி மத வழிபாடுகளும் இடம்பெற்றிருந்தன.
மேலும் இந்த அஞ்சலி நிகழ்வில் பொதுமக்கள் ,மக்கள் பிரதிநிதிகள் ,மத தலைவர்கள் உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
-கே .குமணன்-
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1