தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் படிப்பறிவு இல்லாதவர் எனத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா, ”பயங்கரவாத அமைப்பில் ஆரம்பத்தில் இருந்தவர்கள் எவருக்கும் அவ்வளவாக படிப்பறிவு இல்லை.” எனவும் தெரிவித்தார்.
சிங்கள யுடியூப’ ஒன்றில் நடந்த அரசியல் கலந்துரையாடலில் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்களின் பிரதிநிதிகள், தனி இராஜ்ஜியம் உள்ளிட்ட வாக்குறுதிகளை வழங்கி பாராளுமன்றத்துக்கு வந்தனர். பின்னர் இந்த வாக்குறுதிகளை அவர்கள் நிறைவேற்றவில்லை. இதனாலேயே ஆயுதப் போராட்டம் ஏற்பட்டது என்றார்.
நாட்டை கைவிட்டு வெளிநாடுக்கு சென்றவரே அன்ரன் பாலசிங்கம். அவர் இங்கிலாந்தில் ஒரு தாதியரையே திருமணம் செய்திருந்தார். பாலசிங்கம் கூட படிப்பறிவை கொண்டிருந்தாரா என்பது எனக்கு சந்தேகமே.
பாலசிங்கம் போன்று வெளிநாடுகளில் இருந்தவர்களுக்கு நாட்டில் இனப் பிரச்சினை ஒன்று இருந்தது பயனாக இருந்தது. இவரைப் போன்றவர்கள் வெளிநாடுகளில் குடியுரிமையை பெற்றுக்கொள்ள ஆயுதப் போராட்டங்களை தூண்டனர் எனவும் கூறினார்.