Pagetamil
இந்தியா

அயல்வீட்டு இளைஞனுடன் காதல்…கர்ப்பம்; வீட்டிற்குள்ளேயே யாருக்கும் தெரியாமல் குழந்தை பிரசவித்து கொன்று வீசிய யுவதி: சினிமா பாணி சம்பவம்!

அயல்வீட்டு இளைஞனுடனான காதல், கர்ப்பமாக மாறியதை, வீட்டிற்கு தெரியாமல் மறைத்து, வீட்டிற்குள்ளேயே பிரசவம் பார்த்து, குழந்தையை கொன்ற யுவதியினால் கேரளாவே அதிர்ந்து போயுள்ளது.

கேரளாவின், திருச்சூர் பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.

நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை, பூங்குன்றம் எம்எல்ஏ சாலை கால்வாயில் சிசுவின் சடலமொன்று காணப்பட்டது. பையொன்றில் சுற்றப்பட்ட நிலையில் சடலம் காணப்பட்டது. பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், போலீசார் உடலை கைப்பற்றி, விசாரணையை முடித்து, மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணையின் ஒரு பகுதியாக, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், இரு வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து பிளாஸ்டிக் பையொன்றை போட்டு விட்டு சென்ற காட்சிகள் பதிவாகியிருந்தது.

இதையடுத்து திருச்சூர் வரடியத்தை சேர்ந்த மனுவல் மற்றும் அவரது நண்பர் அமல் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

விசாரணையின் திருச்சூர் வரடியம் பகுதியை சேர்ந்தவர் மேகா (22). அயல்வீட்டுக்காரர் மனுவல் (25). மேகா எம்.காம் பட்டதாரி. திருச்சூரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிபவர். மனுவல் பெயின்டிங் தொழிலாளி.

மனுவலும், மேகாவும் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வந்தனர். காதல் எல்லைமீற, மேகா கர்ப்பமானார். ஆனால், இந்த விடயம் வீட்டிலுள்ளவர்களிற்கு தெரியாமல் மேகா கவனமாக மறைத்து வந்தார்.

வீட்டின் மாடியறையில் மேகா தனியாக தங்குவார். கடந்த சனிக்கிழமை இரவு படுக்கையறையில் மேகா குழந்தை பிரசவித்தார். எனினும், இதுவும் குடும்பத்தினருக்கு தெரியாது.

குழந்தை பிறந்த உடனேயே தண்ணீர் நிரம்பிய வாளியில் குழந்தையை அமுக்கி கொன்றதாக விசாரணையில் மேகா தெரிவித்துள்ளார்.

பின்னர் உடைகளை மாற்றி, குழந்தையை பிளாஸ்டிக் பையில் கட்டி வைத்துள்ளார். மகப்பேற்று கழிவுகளை, கழிவறையில் கொட்டியுள்ளார்.

குழந்தையின் உடல் பிளாஸ்டிக் பையில் வைக்கப்பட்டிருப்பதாக காதலனுக்கு போன் செய்துள்ளார். மறுநாள் காலை 11 மணியளவில், உடல் மனுவலிடம் ஒப்படைக்கப்பட்டது.

மனுவல் தனது நண்பர் அமலிடம் உதவி கேட்டுள்ளார். வரடியம் பாப்பாநகர் காலனி குண்டுகுளம் வீட்டைச் சேர்ந்தவர் அமல் (24).

குழந்தையின் உடலை எரிக்கும் நோக்கத்துடன், மோட்டார் சைக்கிளில் முண்டூரில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு சென்று 150 ரூபாய்க்கு டீசல் வாங்கினர். ஆனால் உடலை எரிக்கும் சூழ்நிலை அமையாதலால், உடலை புதைக்கலாமென திட்டத்தை மாற்றி, பெரமங்கலம் சென்றனர்.

எனினும், மக்கள் நடமாட்டமிருந்ததால், அதனையும் செய்ய முடியவில்லை.

அதன்பின் இருவரும் மோட்டார் சைக்கிளில் பூங்குன்றம் எம்எல்ஏ ரோடு கால்வாய் பகுதிக்கு வந்தனர். அங்கு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, கால்வாய் ஓரம் நடந்து சென்று, மேகா கொடுத்த பிளாஸ்டிக் பையை திறந்து, சடலத்தை கால்வாய் நீரில் போட்டுவிட்டு, வேகமாக திரும்பிச் சென்றனர்.

பொலிசார் சிசிரிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு, குற்றம் நடந்த சில மணித்தியாலங்களிலேயே குற்றவாளிகளை கைது செய்தனர்.

பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் குழந்தையின் டிஎன்ஏ சோதனை குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு

Pagetamil

நெரிசலில் உயிரிழந்த பெண் குடும்பத்தினருக்கு ‘புஷ்பா’ படக்குழு சார்பில் ரூ.2 கோடி நிதியுதவி

Pagetamil

“என்னை நானே சாட்டையால் அடித்துக் கொள்வேன், செருப்பு அணிய மாட்டேன்!” – அண்ணாமலை கொந்தளிப்பு

Pagetamil

தமிழக மீனவர்கள் கைது, தாக்குதல் சம்பவம்: மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

Pagetamil

3 கணவர்களிடமும் இயற்கைக்கு மாறான உறவு குற்றச்சாட்டு: பெண் கைது!

Pagetamil

Leave a Comment