நாட்டின் பல பகுதிகளில் இன்று மின்சாரம் தடைபடலாம் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
நுரைச்சோலை அனல் மின்நிலையத்தில் உள்ள விசையாழியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த மின் தடை ஏற்படக்கூடும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மின் உற்பத்தி இன்னும் முழு கொள்ளளவை எட்டாததால் சில பகுதிகளில் மின் தடைகள் ஏற்படக்கூடும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
900 மெகாவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்து தேசிய மின் கட்டமைப்பிற்கு சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்தார்.
மேலும், இம்மாத தொடக்கத்தில் அனல்மின் நிலையத்தில் உள்ள ஜெனரேட்டர்கள் பழுதடைந்ததால் ஏற்பட்டுள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் தற்போது பராமரிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்றார்.
இதனால் இன்று சில பிரதேசங்களில் 30 முதல் 45 நிமிடங்கள் வரை மின்சாரம் தடைபடலாம் என சுலக்ஷனா ஜயவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.
நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தின் மூன்று மின் உற்பத்தி இயந்திரங்கள் செயலிழந்ததையடுத்து, டிசம்பர் 3 ஆம் திகதி இலங்கை நாடளாவிய ரீதியில் பல மணித்தியாலங்களுக்கு மின்சாரத் தடையை எதிர்கொண்டது.
பின்னர், ஜெனரேட்டர்கள் முழுமையாக சீரமைக்கப்படும் வரை சில நாட்களுக்கு மாலை 06-09 மணி வரை ½ மணிநேரம் முதல் ஒரு மணிநேரம் வரை திட்டமிடப்பட்ட மின்வெட்டுகள் சில நாட்களுக்கு நடந்தது குறிப்பிடத்தக்கது.