கண்டி மாநகர சபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் எதிர்க்கட்சியான பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் ஆனந்த சனத் குமார, பெரமுனவினராலேயே தாக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஆளும் கண்டி மாநகர சபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.
கொவிட் தொற்றுநோய் காரணமாக கண்டி மாநகரசபை கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், வரவு செலவுத் திட்டத்தை எதிர்க்கப் போவதில்லை என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் (பொதுஜன பெரமுன) தெரிவித்துள்ளனர்.
எதிர்க்கட்சித் தலைவர் மரபுப்படி சபைக்கு அறிவித்தார். எதிர்க்கட்சித் தலைவரின் உரையின் பின்னர், பொதுஜன முன்னணியின் உறுப்பினர் தம்மிக்க பெரேரா, கருத்துத் தெரிவிக்க கால அவகாசம் கேட்டபோது, அது மரபுக்கு மாறானது எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து அங்கு களேபரம் ஏற்பட்டது.
பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் ஆனந்த சனத் குமார தாக்கப்பட்டமை தொடர்பில் கண்டி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.