24.8 C
Jaffna
January 4, 2025
Pagetamil
உலகம்

14 வயது சிறுமியை கடத்தி வல்லுறவு: பாகிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் யாசிர் ஷா மீது வழக்கு!

14 வயது சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்து, மிரட்டியதாக பாகிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் யாசிர் ஷா மீது லாகூர் ஷாலிமர் காவல்நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளது.

இஸ்லாமாபாத்தின் ஷாலிமார் காவல் நிலையத்தில் ஒரு பெண்ணின் புகாரின் பேரில் டிசம்பர் 19 அன்று வழக்கு பதிவு செய்யப்பட்டது.

யாசிர் மீதும், அவரது நண்பர் ஃபர்ஹான் மீதும் பாகிஸ்தான் தண்டனைச் சட்டத்தின் 292-பி மற்றும் 292-சி (குழந்தை ஆபாசப் படங்கள்) மற்றும் 376 (பாலியல் வல்லுறவிற்கான தண்டனை) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

முதல் தகவல் அறிக்கையின்படி,

யாசிர் ஷா லாகூரில் உள்ள வீட்டில் நடத்திய கூட்டமொன்றில், யாசிருக்கு அறிமுகமான பெண்ணொருவர் தனது 14 வயது மருமகளை அழைத்து சென்றுள்ளார்.

இதன்பின்னர் இரண்டு மாதங்களின் பின் மருமகள் குழப்பமான நிலையிலும், உடல் நிலை சரியில்லாமலும் இருந்தாள். அவளிடம் தொடர்ந்து வற்புறுத்தி கேட்ட பின்னர், தனக்கு நடந்தவற்றை கூறினாள்.

யாசிர் ஷா வீட்டில், யாசிரின் நண்பன் என கூறி, பர்ஹான், சிறுமியின் தொலைபேசி இலக்கத்தை பெற்றுள்ளார். பின்னர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.  வாட்ஸ்அப்பில் யாசிரிடம் பேசவும் வைத்துள்ளார்.

“ஓகஸ்ட் 14 ஆம் திகதி, அவர் டியூஷன் முடிந்து திரும்பும் போது, ​​ஃபர்ஹான் அவளை ஒரு டாக்ஸியில் ஏற்றி, F-11 இல் உள்ள ஒரு பிளாட்டுக்கு அழைத்துச் சென்றதாக எனது மருமகள் என்னிடம் என்னிடம் கூறினார்,” என்று அத்தை கூறினார்.

ஃபிளாட்டில், ஃபர்ஹான் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோவும் எடுத்ததாகவும்,  நடந்ததைப் பற்றி யாரிடமாவது சொன்னால், வீடியோவை வைரலாக்கி அவளைக் கொன்றுவிடுவேன் என்று மிரட்டியதாகவும் சொன்னாள்.

மேலும், சிறுமியை மிரட்டுவதற்காக அங்கு யாசிரும் அழைக்கப்பட்டிருந்தார்.

“யாசிர் தான் ஒரு சர்வதேச மற்றும் பிரபலமான வீரர் என்று கூறினார். நடந்ததை வெளியில் சொன்னால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தன்னை அச்சுறுத்தினார்,” என்று பெண் கூறினார்.

ஃபர்ஹான் தன்னை மீண்டும் ஒருமுறை பிளாக்மெயில் செய்ததாகவும், E-11 இல் உள்ள ஒரு ஹொட்டலுக்கு மேலே உள்ள ஒரு பிளாட்டுக்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கு அவர் தன்னை இரண்டாவது முறையாக பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் சிறுமி பின்னர் தன்னிடம் கூறியதாக அத்தை கூறினார்.

இதைப் பற்றி கேள்விப்பட்டதும், செப்டம்பர் 10 அல்லது 11 திகதிகளில் யாசிருக்கு வாட்ஸ் அப்பில் போன் செய்தேன். அவர் மேற்கிந்தியத் தீவுகளில் இருந்தார். நடந்த விடயங்களை அவரிடம் சொன்னேன். யாசிர் என்னை கேலி செய்து, என் மருமகள் அழகாக இருப்பதாகவும், அவர் மைனர் பெண்களை விரும்புவதாகவும் கூறினார். அத்துடன், சிறுமியை ஃபர்ஹானுக்கு திருமணம் செய்து வைக்க முன்மொழிந்தார்.

“நான் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று யாசிர் மிரட்டினார். தனக்கு உயர் போலீஸ் மற்றும் இராணுவ அதிகாரிகளுடன் நட்பு இருப்பதாக கூறினார். அவர் என்னை ஒரு வழக்கில் சிக்க வைத்து கொலை செய்வதாக மிரட்டினார்,” என்று புகார்தாரர் கூறினார்.

“போலீசுக்குப் போவதாக நான் மிரட்டியபோது, கடந்த காலங்கள் கடந்ததாக இருக்கட்டும், அந்த சிறுமியை ஃபர்ஹானுடன் திருமணம் செய்து வைப்பதென்றால், அந்தப் பெண்ணுக்கு ஒரு பிளாட் வாங்கி கொடுப்பதுடன்,18 வயது ஆகும் வரை அவளது செலவுகளை ஏற்றுக்கொள்வேன் என்று யாசிர் கூறினார்.

ஃபர்ஹான் மூலம் யாசிர் தன்னை தொடர்ந்து மிரட்டுவதாகவும், இது தொடர்பான ஆடியோ பதிவுகள் இருப்பதாகவும் கூறினார்.

“சில நாட்களுக்கு முன்பு, F-6 இல் உள்ள ஒரு ஹொட்டலில் ஃபர்ஹானை சந்திக்கும்படி யாசிர் என்னிடம் கூறினார். கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ஃபர்ஹான் மீண்டும் என்னை மிரட்டினார்” என்று புகார்தாரர் கூறினார்.

“இப்போது யாசிர் இஸ்லாமாபாத்தில் உள்ள தனது வீட்டில் டிசம்பர் 22 அன்று சந்திப்பதற்கு கேட்கிறார். என் மருமகள் அவரைப் பிரியப்படுத்தினால், எல்லா விஷயங்களும் தீர்க்கப்படும், இல்லையெனில் நீங்கள் விரும்பியதைச் செய்யுங்கள்” என்று அவர் கூறினார்.

ஃபர்ஹானும் யாசிரும் மைனர் சிறுமிகளை தங்கள் ‘ஷிஷா’ மையத்தில் சிக்க வைத்து, அவர்களை பாலியல் பலாத்காரம் செய்து, சம்பவத்தின் வீடியோக்களைப் பயன்படுத்தி மிரட்டுவதாக புகார்தாரர் குற்றம் சாட்டினார்.

யாசிர் ஷா, பர்ஹானிடமிருந்து தானும், மருமகள் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் கொலை மிரட்டல்களை எதிர்கொள்வதாக குற்றம் சாட்டியதுடன், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.

இஸ்லாமாபாத் போலீசார் பாதிக்கப்பட்டவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதாக தெரிவித்தனர். “சூழ்நிலைகள் மற்றும் மருத்துவ பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் விசாரணை முன்னகரும்’ என  பொலிசார் தெரிவித்தனர்.

இதற்கிடையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் (பிசிபி) இந்த சம்பவத்தை கவனத்தில் எடுத்தது. யாசிரின் பெயரைக் குறிப்பிடாமல், வாரியத்தின் “மத்திய ஒப்பந்த வீரர்களில்” ஒருவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளைக் கவனிப்பதாக குறிப்பிட்டுள்ளது.

“தற்போது தகவல்களைச் சேகரித்து வருவதாகவும், முழுமையான உண்மைகள் இருக்கும் போது மட்டுமே கருத்து தெரிவிக்கப்படும்” என்றும் கூறியது.

லெக்-ஸ்பின்னர் யாசிர் ஷா, 2014 முதல் பாகிஸ்தானின் முக்கிய பந்துவீச்சாளராக இருந்து வருகிறார். 2018 ஆம் ஆண்டில், கிரிக்கெட்டில் 82 ஆண்டுகால உலக சாதனையை முறியடித்தார், 33 போட்டிகளில் 200 டெஸ்ட் விக்கெட்டுகளை எடுத்த முதல் பந்துவீச்சாளர் ஆனார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

உலகின் மிக வயதான பெண் காலமானார்!

Pagetamil

இறந்த குட்டியின் உடலை சுமந்தபடி சுற்றித்திரியும் திமிங்கிலம்!

Pagetamil

16 முறை விண்வெளியில் புத்தாண்டை கொண்டாடும் சுனிதா வில்லியம்ஸ்

east tamil

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி காட்டர் காலமானார்!

Pagetamil

தென்கொரிய விமான விபத்தில் 179 பேர் பலி

Pagetamil

Leave a Comment