உலகின் முன்னணி டென்னிஸ் வீரரான ஸ்பெயின் ரபேல் நடால் கொரோனா தொற்றிற்குள்ளாகினார்.
கடந்த வாரம் அபுதாபியில் நடைபெற்ற கண்காட்சி டென்னிஸ் போட்டித் தொடரில் பங்கேற்றார்.
இதன் முதல் ஆட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை முன்னாள் நம்பர் வன் வீரரான இங்கிலாந்தின் ஆண்டி முர்ரேவுடன் மோதிய நடால் தோல்வியை சந்தித்தார். தொடர்ந்து சனிக்கிழமை நடைபெற்ற 2வது ஆட்டத்தில் கனடாவின் டெனிஸ் ஷபோவலோவிடமும் வீழ்ந்திருந்தார். இதை தொடர்ந்து நடால் தாயகம் திரும்பினார்.
இந்நிலையில் ஸ்பெயின் திரும்பிய தனக்கு நேற்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக ட்விட்டர் வாயிலாக தெரிவித்துள்ளார் நடால். தற்போது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும், கொஞ்சம் கொஞ்சமாக உடல் நலம் பெறுவேன் என்றுநம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1