Pagetamil
இலங்கை

பெண்களே இந்த ஆயுதம் வேண்டாம்: கணவர்மாரை மிரட்ட தீக்குளிப்பு நாடகமாடிய இளம் மனைவிகளே இந்த வருடம் அதிகம் உயிரிழந்தனர்!

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீக்குளித்த நிலையில் இந்த வருடம் அனுமதிக்கப்பட்ட 20 பெண்கள் உயிரிழந்துள்ளதாக கொழும்பு மாநகர மேலதிக மரண விசாரணை அதிகாரி இரேஷா சமரவீர தெரிவித்துள்ளார்.

இவர்களில் 19 பேர், 20- 30 வயதுக்குட்பட்ட திருமணமான பெண்கள் என்று அவர் கூறினார்.

அவர்களில் 99 வீதமானவர்கள் தமது கணவனை அச்சுறுத்தும் முயற்சியில் ஈடுபட்ட போது தீப்பற்றியதாகவும், தீப்பற்றிய தருணத்திலிருந்து தம்மைக் காப்பாற்றுமாறு பிறரிடம் உதவி கோரியமை மரண விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இவர்கள் ஐம்பது சதவீதத்திற்கும் அதிகமான தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் இறக்கும் தருணம் வரை மிகவும் நல்ல மனநிலையில் இருந்தனர் என்று அவர் கூறினார்.

தோலுக்கு அடியில் உள்ள எண்ணெய் படலம் தீக்கு நல்ல ஊக்கியாக இருப்பதால், உடல் தீப்பிடிக்கும் போது, ​​தீயை அணைப்பது பொதுவாக கடினமாக இருக்கும் என்றும், அதனால் தான் ஒரு மரத்தை விட உடல் வேகமாக எரியும் என்றும் மரண விசாரணை அதிகாரி கூறினார்.

எனவே, தீக்குளிக்க நினைப்பதோ அல்லது பிறரை அச்சுறுத்த தீவைக்கப் போவதாக மிரட்டும் ஆபத்தான நடவடிக்கைகளையே மேற்கொள்ள வேண்டாமென கூறினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கடற்படையின் இலவச பல் மருத்துவ முகாம்

east tamil

750,000 அரசு ஊழியர்களுக்கு ஆபத்து – நாமல் ராஜபக்ச எச்சரிக்கை

east tamil

இனவாத அரசியலின் பிரதிபலிப்பு: ஜேவிபியின் முகத்தை வெளிப்படுத்தும் கஜேந்திரகுமார்

east tamil

வறுமை கல்விக்கு தடையாக அமையக்கூடாது – வடக்கு ஆளுநர்

east tamil

வடமேல் மாகாணத்தில் விசேட குற்றத்தடுப்பு பிரிவு – ஆனந்த விஜேபால

east tamil

Leave a Comment