25.7 C
Jaffna
January 15, 2025
Pagetamil
கிழக்கு

மாவீரர் நாளில் பேஸ்புக்கில் கவிதை பதிவிட்ட இளைஞன் ஒரு வருடத்தின் பின் பிணையில் விடுதலை!

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த பாலகிருஸ்ணன் ரதிகரன் (28) என்ற இளைஞனுக்கு ஒரு வருடத்திற்குப் பின்னர் நேற்று (14) திருகோணமலை மேல் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கு மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணையில் செல்ல அனுமதி வழங்கி தீர்ப்பளித்தார். எதிராளியின் சார்பாக சட்டத்தரணி நா.மோகன் ஆஜராகியிருந்தார்.

மூதூர் – சம்பூர் 2ம் வட்டாரத்தைச் சேர்ந்த குறித்த இளைஞன், மாவீரர் தினத்தையொட்டி கவிதை ஒன்றினை தனது முகப்புத்தகத்தில் பதிவேற்றியமைக்காக 27.11.2020 அன்று பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு திருகோணமலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

இவருக்கு எதிரான வழக்கு மூதூர் நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்று வந்த நிலையில் இவருடைய விடுதலைக்காக பல்வேறு தரப்பினரும் முயற்சி செய்துவந்தனர். அந்தவகையில் சட்டத்தரணியும் மனித உரிமை செயற்பாட்டாளருமாகிய ரனித்தா மயூரன் குழுவினரால் சிரேஷ்ட சட்டத்தரணி ரத்தினவேல் தலைமையில் திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் பிணைக்கான விண்ணப்பம் கோரப்பட்டிருந்த நிலையில் இவ்வழக்கை விசாரித்த மேல் நீதிமன்ற நீதிவான் மாணிக்கராசா இளஞ்செளியன் பிணை வழங்கி தீர்ப்பளித்தார்.

அத்துடன் திருகோணமலையில் மட்டுமல்லாது பல மாவட்டங்களில் இருந்தும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பல இளைஞர்கள் இன்னும் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மக்களிடம் உதவி கோரிக்கை

east tamil

விரைவில் கிழக்கு மாகாணத்தில் வெள்ளம்

east tamil

அக்கரைப்பற்று புகைப்படக் கலை விழா- 2025

east tamil

கல்முனை-கொழும்பு சாலை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

east tamil

கந்தளாய் கொள்ளைச் சம்பவம்: சம்பூர் பகுதியைச் சேர்ந்த மூவர் கைது

east tamil

Leave a Comment