26 C
Jaffna
December 30, 2024
Pagetamil
இலங்கை

யுகதனவி ஒப்பந்தத்தினால் அரசின் கௌரவம் முற்றாக சீரழிந்து விட்டது: ரத்ன தேரர்!

யுகதனவி மின் உற்பத்தி நிலைய ஒப்பந்தத்தினால் அரசாங்கத்தின் கௌரவம் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதாக  எமது மக்கள் சக்தி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்

எல்என்ஜியை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்க நிதி அமைச்சகம் ஒப்பந்தம் செய்து கொண்டது பற்றி எரிசக்தி அமைச்சருக்கு தெரியாது என்றும் கூறினார்.

அரசாங்கத்துடன் இணைந்த 11 கட்சிகளின் பங்குபற்றுதலுடன் இன்று எஹலியகொடவில் இடம்பெற்ற மக்கள் சபைக் கூட்டத்தின் போதே இதனை தெரிவித்தார்.

இந்த ஒப்பந்தம் அரசாங்கத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு களங்கம் ஏற்படுத்துவதாக தெரிவித்தார்.

இந்த உடன்படிக்கையை ஜனாதிபதி வாசித்தாரா என்பது தமக்குத் தெரியாது எனவும், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அதனை அங்கீகரித்துள்ளார் எனவும் ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

தானும் மற்ற அமைச்சர்களும் கவலைகளை எழுப்பாமல் அமைதியாக இருக்க முடியாது என கூறினார். அரசாங்கத்தின் நடவடிக்கைகள் பற்றி யாருக்கும் தெரியாது என்றும் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, தற்போதைய சூழ்நிலையில் சில நபர்கள் கடுமையான தீர்மானங்களை மேற்கொள்ள முன்வருகின்றனர்.

எவ்வாறாயினும், இது பொதுமக்களுக்கு மேலும் சுமைகளை ஏற்படுத்தும் என்றும் உயர் வகுப்பினர் பாதிக்கப்பட மாட்டார்கள் என்றும் கூறினார்.

இவ்வாறான தீர்வுகளை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஊழல் உடன்படிக்கைகளில் இருந்து நாட்டை காப்பாற்ற வேண்டும் என அமைச்சர் கூறினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யாழ் வீதியில் சாகசம் காட்டிய தனியார் சிற்றூர்தியின் வழித்தட அனுமதி இரத்து!

Pagetamil

பல்கலைக்கழக வளாகங்களாக மாறும் தேசிய கல்வியியல் கல்லூரிகள்

east tamil

சிகிரியாவுக்காக நிதி உதவியை முன்மொழிந்த கொரிய நிறுவனம்

east tamil

உப்பிற்கு தட்டுப்பாடு இல்லை – டி. நந்தன திலக

east tamil

பெரஹரா யானை தாக்கியதில் ஒருவர் காயம்

east tamil

Leave a Comment