25.5 C
Jaffna
January 13, 2025
Pagetamil
இந்தியா

மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றார் இந்திய அழகி ஹர்னாஸ் சாந்து

21 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் ஹர்னாஸ் சாந்து மிஸ் யுனிவர்ஸ் எனப்படும் பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றார்.

கடைசியாக கடந்த 2000 ஆம் ஆண்டு லாரா தத்தா, மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றிருந்தார். இந்நிலையில். 21 வயது இளம் பெண்ணான ஹர்னாஸ் சாந்து மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றுள்ளார்.

இஸ்ரேலின் எய்லாட் நகரில் நடந்த கண்கவர் போட்டியில் அவருக்கு இந்தப் பட்டம் வழங்கப்பட்டது. முதன் ரன்னர் அப்பாக பராகுவே அழகியும், 2வது ரன்னர் அப்பாக தென்னாபிரிக்க அழகியும் தேர்வாகியுள்ளனர்.

வீடியோவை காண இங்கு அழுத்துங்கள்

ஹர்னாஸ் சாந்து பஞ்சாப் மாநிலத்தின், சண்டிகரை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

1994 ஆம் ஆண்டு பிலிப்பைன்ஸில் நடந்த மிஸ் யூயுனிவெர்ஸ் போட்டியில் சுஷ்மிதா சென் முதன்முறையாக மிஸ் யுனிவெர்ஸ் பட்டம் வென்ற இந்திய அழகி என்ற பெருமையைப் பெற்றார்.

வீடியோவை காண இங்கு அழுத்துங்கள்

அதன் பின்னர் கடந்த 2000 ஆம் ஆண்டு லாரா தத்தா அந்தப் பட்டத்தை வென்றார். இப்போது 21 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் ஹர்னாஸ் சாந்து மிஸ் யுனிவர்ஸ் எனப்படும் பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றார்.

சண்டிகரை சேர்ந்த 21 வயதான ஹர்னாஸ் சந்து அங்கு தனது பள்ளி மற்றும் கல்லூரியை முடித்துள்ளார். யார தியான் பூ பரன் மற்றும் பாய் ஜி குட்டாங்கே போன்ற பஞ்சாபி படங்களில் நடித்திருக்கிறார்.

அவர் நடிப்பு, பாடுதல், நடனம், யோகா, நீச்சல், குதிரை சவாரி மற்றும் சமையல் ஆகியவற்றில் ஆர்வம் காட்டுகிறார்.

அவர் டைம்ஸ் ஃப்ரெஷ் ஃபேஸ் மிஸ் சண்டிகர் 2017இன் வெற்றியாளர். இதனுடன், மிஸ் மேக்ஸ் எமர்ஜிங் ஸ்டார் இந்தியா 2018 மற்றும் ஃபெமினா மிஸ் இந்தியா பஞ்சாப் 2019 ஆகியவற்றின் வெற்றியாளராகவும் இருந்தார். ஃபெமினா மிஸ் இந்தியா 2019 போட்டியில் 11வது இடத்தையே பிடித்தார். .

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் – இலங்கை அமைச்சர்கள் சந்திப்பு

east tamil

‘பெரியார் என்ன சமூகநீதி செய்தார்… பெண்ணுரிமை பேச பிரபாகரனுக்கு மட்டுமே தகுதி இருக்கிறது’- சீமான்

Pagetamil

5 ஆண்டுகளில் 64 பேரால் பாலியல் வன்கொடுமை: காதலனின் துரோகம் மாணவியின் வாழ்வை சிதைத்த கொடூரம்

east tamil

சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு மரண தண்டனை: தமிழக சட்டப்பேரவையில் சட்ட மசோதாக்கள் நிறைவேற்றம்

Pagetamil

“நாம் தமிழர் கட்சியை கலைத்துவிட்டு சீமான் பாஜகவில் சேர வேண்டும்” – மாணிக்கம் தாகூர் எம்.பி.

Pagetamil

Leave a Comment