கொழும்பு, பொரளை- மருதானை வீதியிலுள்ள நகைக்கடை ஒன்றிற்கு கடந்த 11ஆம் திகதி மாலை ஆயுதம் தாங்கிய இரு கொள்ளையர்கள் புகுந்து அதன் உரிமையாளரையும் ஊழியர்களையும் ஆயுத முனையில் அச்சுறுத்தி 35 இலட்சத்திற்கும் அதிக பெறுமதியான நகைகளை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இது தொடர்பில் 5 சிறப்பு பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.
பிற்பகல் 2.50 மணியளவில் தங்க நகைகளை வாங்குவதாக கூறி கடைக்குள் நுழைந்த இரு கொள்ளையர்கள், கைத்துப்பாக்கியால் மேல் நோக்கி சுட்டு, உரிமையாளர் மற்றும் ஊழியர்களை அச்சுறுத்தியுள்ளனர்.
நகைக்கடையிலிருந்த நகைகளை சூட்கேஸில் வைத்துக் கொண்டு இருவரும் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர்.
இரண்டு கொள்ளையர்களும் முகத்தை மறைத்து தலைக்கவசம் அணிந்திருந்தனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1