26.3 C
Jaffna
January 15, 2025
Pagetamil
இலங்கை

‘மஹிந்த ஆட்சியிலாவது பேச முடிந்தது; இந்த ஆட்சியில் பங்காளிகளின் பேச்சை கேட்பதேயில்லை’: புலம்பும் பங்காளி திஸ்ஸ விதாரண!

அரசாங்கம் பங்காளி கட்சிகளுடன் கலந்துரையாடி எந்தவித முடிவுகளையும் எடுப்பதில்லை என ஆளுங்கூட்டணியின் பங்காளிக்கட்சியான லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ விதாரண குற்றம் சுமத்தியுள்ளார்.

தலவாக்கலை, அக்கரபத்தனை பகுதியில் நேற்று (12) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

‘மஹிந்த ராஜபக்ஸ ஜனாதியாக இருந்த போது எம்முடன் கலந்துரையாடி சில தீர்மானங்களை எடுத்தார். ஆனால் அவ்வாறான நடைமுறையை நடப்பு அரசாங்கத்தில் காண முடியவில்லை. அதனால் அரசாங்கத்தில் உள்ள குறைப்பாடுகளை எமக்கு சுட்டிக்காட்ட முடியாமல் உள்ளது.

தற்போதைய நிலையில் நாட்டின் பொருளாதாரம் சரிவை நோக்கி பயணிக்கின்றது. அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தால் மக்கள் சிரமமப்படுகின்றனர். இவ்வாறான பல பிரச்சினைகள் உள்ளன.

இவை தொடர்பில் கதைக்க எமக்கு சந்தர்ப்பமில்லாமல் உள்ளது. உறுதியளித்தபடி அமைச்சரவையில் எனக்கு எந்தவித பொறுப்பும் வழங்கப்படவில்லை. நான் சாதாரண பாராளுமன்ற உறுப்பினர் மட்டுமே. ஆகவே அமைச்சரவையில் எடுக்கும் முடிவுகளுக்கு ஆலோசனை வழங்கவும் முடியாதுள்ளது.

மக்கள் சிரமத்திற்குள் விழுவதை தடுக்க என்னிடம் பல யோசனைகள் உள்ளன. கொவிட் சமூகத்தில் பரவலடையும் போது அதனை தடுக்க பிரத்தியேக வேலைத்திட்டம் ஒன்றை அமுலாக்க வேண்டும். அது தொடர்பான எனது ஆலோசனைகளும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. எனது ஆலோசனைகள் ஏற்கப்பட்டிருக்குமானால் நிலைமை கடினமாய் இருந்திருக்காது.’ என்றார்.

க.கிஷாந்தன்-

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நாகர்கோவில் பகுதியில் கரை ஒதுங்கிய மர்ம படகு

east tamil

வெலே சுதா, மனைவிக்கு 8 வருட சிறைத்தண்டனை!

Pagetamil

தாயை மிரட்டி யுவதியை கடத்திய காதலன் கைது

east tamil

ஆசிரியர் இடமாற்றத்தில் அரசியல் தலையீடு வேண்டாம் – ஜோசப் ஸ்டாலின்

east tamil

‘இளம் பெண்களை நிர்வாணமாக்கி….’- வெளிநாட்டு வேலைக்கு சென்று திரும்பிய தமிழ் பெண் வெளியிட்ட அதிர்ச்சிக் கதைகள்!

Pagetamil

Leave a Comment