நடிகர் சிம்பு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக சிம்பு நடிக்கும் ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. கவுதம் வாசுதேவ் மேனன்- ஏ.ஆர்.ரஹ்மான்-சிம்பு கூட்டணி 3வது முறையாக இந்த படத்தில் இணைந்திருப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
இந்தநிலையில் நடிகர் சிம்பு இன்று காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளது.
செய்தி வெளியானதுமே அவரது ரசிகர்கள், சீக்கிரம் அவர் குணமாகி வர வேண்டும் என சமூகவலைதளங்களில் பதிவிட்டு டிரெண்ட் செய்தனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1