கொட்டதெனியாவ, வாரகல பகுதியில் உள்ள கோழிப்பண்ணையில் இன்று (11) ஏற்பட்ட தீ விபத்தில் ஆயிரக்கணக்கான கோழிகள் கருகி உயிரிழந்துள்ளதாக கொட்டதெனியாவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கோழிப்பண்ணையில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
நீர்கொழும்பு தீயணைப்பு பிரிவினர் தீயை அணைத்துள்ளனர். உயிரிழந்த கோழிகளின் எண்ணிக்கை சுமார் 10,000 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொடதெனியாவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1