நியூஸிலாந்தில் சிகரெட் விற்பனைக்குத் தடை விதிக்க அந்நாட்டு அரசாங்கம் திட்டமிட்டு வருகிறது.
புகைப் பழக்கத்தை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில் நியூஸிலாந்து செயல்படுகிறது.
சிகரெட் விற்பனையைத் தடை செய்வதன் மூலம் நியூஸிலாந்தில் இளையர்கள் அவர்கள் வாழ்வில் சிகரெட்டைப் புகைத்துப் பார்க்கவே முடியாத சூழலை ஏற்படுத்த முடியும் என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.
புகைப் பழக்கத்திற்கு எதிராக பல நடவடிக்கைகளை நியூஸிலாந்து எடுத்து வருகிறது.
சிகரெட் புழக்கத்திற்கு எதிரான நடவடிக்கைகள் பலன் தருவதற்குக் காலம் பிடிக்கும் என்பதால், கடுமையான திட்டங்களை கையில் எடுக்க நியூஸிலாந்து யோசித்து வருகிறது.
அடுத்த ஆண்டு இறுதிக்குள் புதிய சட்டம் நடப்புக்கு கொண்டுவரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2027ஆம் ஆன்டு முதல் நியூஸிலாந்தில் 14 வயதுடையவர்கள் சிகரெட்டுகளை வாங்க முடியாது என்ற சட்டம் நடப்பில் உள்ளது.
அதேபோல் சிகரெட்டில் உள்ள நிக்கோட்டினின் அளவும் குறைக்கப்படும்.
புதிய சட்டம் நடப்பிற்கு வந்தால் பூட்டானுக்குப் பிறகு சிகரெட்டுகளுக்கு தடை விதிக்கும் இரண்டாவது நாடாக நியூஸிலாந்து இருக்கும்.