மஹாராஷ்டிரா மாநிலத்தில் 19 வயது பெண்ணின் தலையை தாயின் துணையுடன் சகோதரன் அறுத்து துண்டித்து செல்பி எடுத்து பகிர்ந்ததோடு, காவல் நிலையத்தில் சரண் அடைந்த சம்பவம் மாநில அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொடூர சம்பவம் கடந்த ஞாயிற்று கிழமை அவுரங்காபாத் மாவட்டத்தில் நடந்துள்ளது. கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயர் கிர்தி மோட் (19).
இந்த பெண் அவினாஷ் தோரே என்ற வாலிபரை காதலித்து வந்துள்ளார். வாலிபர் வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் வீட்டில் இவர்களது திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் 21ஆம் திகதி கிர்தி மோட் வீட்டைவிட்டு வெளியேறி காதலனை திருமணம் செய்துகொண்டு கணவன் வீட்டில் மாமியார், மாமனாருடன் வசித்து வந்தார்.
கர்ப்பமாக இருக்கும் கிர்தி மோட் தாயை காண போகிறோம் என்ற மகிழ்ச்சியில் அதற்கு சரி என்று கூறவே சம்பவத்தன்று தாயும், மகனும் நேராக மகள் வேலை பார்க்கும் பண்ணைக்கு சென்றுள்ளனர்.
அப்போது, தாயை பார்த்ததும் உண்டான சந்தோஷத்தில் கிர்தி மோட் கட்டி அணைத்து வரவேற்றுள்ளார். பின்னர் வீட்டுக்கு அழைத்து சென்று அவர்களை உட்கார சொல்லிவிட்டு தேனீர் போட சமையலறைக்கு சென்றுள்ளார்.
அவினாஷ் உடல்நலமில்லாமல் பக்கத்து அறையில் படுத்திருந்தார்.
சிறிது நேரத்தில், கையில் கத்தியுடன் உள்ளே நுழைந்த பெண்ணின் தம்பி, அக்காவை சரமாரியாக தாக்கவே அவர் அலறிக்கொண்டு தப்ப முயன்றுள்ளார். அப்போது மகளின் கால்களை தாய் இறுக்கிப்பிடித்துக்கொள்ள, உடன் வந்த சகோதரன் கிர்தி மோட்டின் கழுத்தை துண்டாக அறுத்து வெளியே எடுத்து வந்துள்ளான்.
சகோதரியின் தலையை மேலே தூக்கி அசைத்து, வெற்றிக் கொண்டாட்டத்திலும் ஈடுபட்டர்.
துண்டிக்கப்பட்ட தலையுடன் சகோதரனும், தாயும் செல்பி படம் எடுத்தனர்.
அவினாஷையும் தாக்க முயன்றார். எப்படியோ அவர் தப்பியோடி பொலிஸ் நிலையத்தில் தஞ்சம் கோரியிருந்தார்.
அக்காவை கொன்ற பின்னர், அவுரங்காபாத் காவல் நிலையத்திற்கு நேரடியாக சென்று சரணடைந்துள்ளான்.
சகோதரர் சங்கேத் சஞ்சய் மோடே (18), அவரது தாயார் ஷோபா சஞ்சய் மோடே (38) ஆகியோரை பொலிசார் கைது செய்தனர்.