திருகோணமலை-கண்டி பிரதான வீதி மங்குபிரிஞ் பகுதியில் ஆடை தொழிற்சாலைக்கு சொந்தமான தனியார் பஸ்ஸொன்று விபத்துக்குள்ளானதில் இதுவரை 12 பேர் காயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
குறித்த விபத்து இன்று (07காலை 6.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
குச்சவெளி பிரதேசத்தில் இருந்து கப்பல் துறை தனியார் ஆடைத் தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றிச் செல்லும் போது இரண்டு பஸ்களை முந்திச்செல்ல முற்பட்டபோது வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
விபத்து தொடர்பில் உப்புவெளி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
-திருகோணமலை ரவ்பீக் பாயிஸ் –
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
2