மியன்மாரில் பதவியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அரசாங்க ஆலோசகர் ஆங் சான் சூகிக்கு விதிக்கப்பட்ட 4 ஆண்டுச் சிறைத்தண்டனை பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது.
மியன்மாரின் அதிகாரபூர்வத் தொலைகாட்சி நிறுவனம் அதனை அறிவித்தது.
சூகியையும் முன்னாள் ஜனாதிபதி வின் மிண்ட்டையும் மன்னித்து தண்டனைக் காலத்தைக் குறைத்ததாக மியன்மாரின் ஆட்சியை சட்டவிரோதமாக பிடித்துளள இராணுவத் தலைவர் மின் ஆங் லைன் தெரிவித்தார்.
சூகிக்கும், வின் மிண்ட்டுக்கும் இராணுவத்திற்கு எதிராகக் கருத்து வேறுபாட்டைத் தூண்டிவிட்டதற்காகவும் COVID-19 விதிமுறைகளை மீறியதற்காகவும் தண்டனை அறிவிக்கப்பட்டது.
மக்களின் தீர்ப்பிற்கு எதிராக இராணுவம் ஆட்சியை பிடித்துள்ளதால் மியன்மார் உலகிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளதும், ஆட்சியாளர்களிற்கு எதிராக அந்த நாட்டிவ் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.