25.6 C
Jaffna
January 22, 2025
Pagetamil
இந்தியா

நடிகர் சத்யராஜின் சகோதரி காலமானார்!

நடிகர் சத்யராஜின் சகோதரி காலமானார்.

காங்கிரசைச் சேர்ந்த தமிழக முன்னாள் அமைச்சர் மறைந்த நல்லதம்பி சர்க்கரை மன்றாடியாரின் மகன் அர்ஜூன் மன்றாடியார். இவர் காங்கேயம் தொகுதி முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ.வான ராஜ்குமாரின் உடன் பிறந்த தம்பியும் ஆவார். இவர் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தாலுகா நத்தக்காடையூர் அருகே உள்ள பழையகோட்டை அரண்மனை சீரப்பள்ளத்தோட்டத்தை சேர்ந்தவர் ஆவார்.

என்.அர்ஜுன் மன்றாடியார் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மனைவி ஏ.கல்பனா மன்றாடியார் (66). இவர் நடிகர் சத்யராஜின் உடன் பிறந்த தங்கை ஆவார்.

உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஒரு வாரமாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கல்பனா சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தார்.

மறைந்த என்.அர்ஜுன் மன்றாடியார் – ஏ.கல்பனா தம்பதிக்கு ஏ.மகேந்தர் என்ற மகன் உள்ளார். இவர் நடிகர் சத்யராஜின் மகளான டாக்டர் திவ்யாவை திருமணம் செய்து உள்ளார்.

காலமான கல்பனாவின் இறுதிச்சடங்குகள் இன்று காலை 10 மணிக்கு பழையகோட்டை சீரப்பள்ளம் தோட்டத்தில் நடைபெற உள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘எல்லை தாண்டி செல்ல வேண்டாம்’ – தமிழக மீனவர்களுக்கு மீன்வளத் துறை அறிவுரை

Pagetamil

மருதங்கேணி பொலிஸாரால் சற்றுமுன் இரண்டு பெண்கள் கைது: மேலும் இருவருக்கு அழைப்பு

east tamil

ஆசிரியரின் ஆபாச பேச்சால் தற்கொலைக்கு முயன்ற 10ம் வகுப்பு மாணவி

east tamil

மாணவியை மிரட்டி நிர்வாண வீடியோ எடுத்த மாணவர்கள் கேரளாவில் கொடூரம்

east tamil

“விமான நிலையம் வேண்டாம் என்று கூறவில்லை, ஆனால்” – பரந்தூரில் விஜய் பேசியது என்ன?

Pagetamil

Leave a Comment