கிண்ணியா- குறிஞ்சாக்கேணி படகு விபத்தில் காயமடைந்த மேலுமொரு பெண் உயிரிழந்துள்ளார்.
கிண்ணியா- குறிஞ்சாக்கேணி படகுப்பாதையில் கடந்த நவம்பர் 23ஆம் திகதி நிகழ்ந்த விபத்தில், சம்பவ இடத்திலேயே 6 பேர் உயிரிழந்தனர். பின்னர், காயமடைந்திருந்த சிறுமியொருவரும் உயிரிழந்திருந்தார்.
இந்த நிலையில், சிகிச்சை பெற்று வந்த மேலுமொரு பெண்ணும் உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சகரியா ஹலிஷா (40) என்ற பெண்ணே உயிரிழந்துள்ளர்.
இவரது 6 வயதான மகன் பதுர்தீன் முகமது வஹீத்படகு விபத்தில் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கிண்ணியா படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.