26.7 C
Jaffna
December 28, 2024
Pagetamil
கிழக்கு

அரசின் முடிவுகள் ஏன் மட்டக்களப்பில் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை?: ஞானசாரருக்கு வந்த சந்தேகம்!

இலங்கை ஜனாதிபதி மற்றும் உயர் மட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் ஏன் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என ஒரே நாடு ஒரே சட்டம் என்ற பரிந்துரைக் குழுவின் தலைவர் கலகொட அத்தே ஞானசாரதேரர் கேள்வி எழுப்பினார்.

இன்று கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கருப்பொருளில் நடைபெற்ற நிகழ்வின்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கடந்த 30 வருட காலமாக ஏழை மக்கள் தங்களது பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காமல் கண்ணீர் விட்டு வருகின்றனர்.எனவே பல்வேறுபட்ட பிரச்சினைகளை தீர்க்கவேண்டிய நிலை இருக்கிறது. யுத்த காலங்களில் வெளியேறியவர்கள் தமிழ், சிங்களம், முஸ்லிம் என்ற வேறுபாடு பார்க்காமல் அவர்கள் வாழ்ந்த இடங்களில் குடியேற்றப்பட வேண்டும்.

ஒரே நாடு ஒரே சட்டம் என்ற செயலனிக் குழுவில் வழங்கப்படும் பரிந்துரைக்கு இன்று வாழைச்சேனைக்கு வந்தவுடன் தீர்வு கிடைத்துள்ளதாக ஞானசார தேரர் மேலும் தெரிவித்தார்.

இன்று ஞானசாரர் தேரர் மற்றும் யோகேஸ்வரி பற்குணராஜா உள்ளிட்ட பரிந்துரைக்குழுவினர் வாழைச்சேனைக்கு வந்திருந்தனர். வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது திம்புலாகல தேவாலங்கார தேரோ மற்றும் பிரதேச புத்திஜீவிகள் மற்றும் பொது மக்களும் கலந்து கொண்டு  தாங்கள் எதிர்நோக்கும் பல்வேறுபட்ட பிரச்சினைகளை முன்வைத்தனர்.

இதன்போது காணிப்பிரச்சினை, வீதி, பாலம், காணி எல்லை தொடர்பான விடயங்கள், சிங்கள குடியேற்றங்கள் பொளத்த மத பாடசாலை அமைத்தல்.என பல்வேறுபட்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

இன்று ஞானசாரதேரரின் வருகையடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பத்தாம் குறிச்சி அறிவு ஒளி மையத்தின் முத்தமிழ் மாணவர் மன்றம்

east tamil

அஷ்ஷேய்க் காரி முகம்மது சஆத் நுமானின் கல்முனை வருகை

east tamil

கல்முனை வைத்தியசாலைக்கு ஆதம்பாவா திடீர் விஜயம்

east tamil

தருமை ஆதீனம் திருக்கோணேஸ்வரத்திற்கு வருகை

east tamil

கிழக்கு மாகாண சபையின் புதிய நியமனங்கள்

east tamil

Leave a Comment