போதைக்கு அடிமையான தனது மகனை கொலை செய்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேரள மாநிலத்தின், விழிஞ்சத்தை சேர்ந்த நதீரா என்ற பெண்ணே கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலைச் சம்பவம் நடந்து ஓராண்டுக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளார். நாதிராவின் மகன் சித்திக் 2020 செப்டம்பரில் விட்டில் இறந்து கிடந்தார்.
சித்திக் தற்கொலை செய்து கொண்டதாக நதீரா தனது உறவினர்கள் மற்றும் அயலவர்களிடம் கூறியுள்ளார். அத்துடன் சடலத்தை அடக்கம் செய்ய அவசரம் காண்பித்துள்ளார்.
எனினும், பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர்.
சித்திக்கின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
சித்திக் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பின்னரே, சித்திக்கின் தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் நடத்த போது வீட்டில் சித்திக், அவரது தாய் மற்றும் சகோதரி மட்டுமே இருந்தனர்.
போதைக்கு அடிமையான சித்திக், போதையில் தனது சகோதரியை பாலியல் ரீதியாக துன்புறுத்த முயன்றதால், தாயார் நாதிரா இந்த கொலை செய்தது தெரிய வந்ததென போலீசார் தெரிவித்தனர்.