மின்சார விநியோகத்தை முழுமையாக சீரமைக்க இன்னும் மூன்று மணித்தியாலங்கள் வரை ஆகும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இன்று முற்பகல் நாடளாவிய ரீதியில் மின்சாரம் தடைப்பட்டது.
மின் விநியோக பாதைகளில் ஏற்பட்ட கோளாறு காரணமாக 11.45 மணியளவில் நாடளாவிய ரீதியில் மின்சாரம் தடைப்பட்டதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
கொத்மலையிலிருந்து பியகம வரை மின்சாரத்தை கொண்டு செல்லும் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறினாலேயே மின் விநியோகம் பாதிக்கப்பட்டது. மின் விநியோகத்தை உடனடியாக சீரமைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, மின்சாரம் துண்டிக்கப்பட்டதன் காரணமாக கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் பல பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
1
+1
+1
+1
+1
+1
+1