எரிவாயு கசிவு வெடிப்புச் சம்பவங்கள் காரணமாக பாடசாலை முறை பாதிக்கப்படும் என கல்வி சாரா ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அந்த சங்கத்தின் பிரதம செயலாளர் அஜித் கே திலகரத்ன, எரிவாயு சிலிண்டர்களை பயன்படுத்தும் பாடசாலைகள் பல உள்ளன. பாடசாலை ஆய்வகங்கள், வீட்டு அறிவியல் ஆய்வகங்கள் மற்றும் பாடசாலை விடுதிகள் போன்ற இடங்களில் எரிவாயு பயன்படுத்தப்படுவதால் இது ஆபத்தை ஏற்படுத்துகிறது என்றார்.
ஏறக்குறைய 5,500 பாடசாலைகள் எரிவாயு சிலிண்டர்களைப் பயன்படுத்துகின்றன என்று அவர் கூறினார். எரிவாயு கசிவு வெடிப்பு ஏற்பட்டால், பாடசாலை கட்டிடங்கள் மற்றும் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள்.
ஆய்வகங்களில் இரசாயன எதிர்வினைகள் மற்றும் வாயு கசிவு வெடிப்பு மிகவும் மோசமான சூழ்நிலையை உருவாக்கும் என்று திலகரத்ன குறிப்பிட்டார்.