எரிவாயு சிலிண்டர்கள் தொடர்பான தற்போதைய பிரச்சினைகளுக்கு எரிவாயு நிறுவனங்களே முழுப்பொறுப்பையும் ஏற்க வேண்டும் என நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.
இரண்டு பிரதான எரிவாயு நிறுவனங்களின் குறைபாடுகள் காரணமாக நுகர்வோர் பாதிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வென்னப்புவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் அழகியவண்ண, மக்கள் எதிர்நோக்கும் இன்னல்கள் குறித்து வருத்தம் தெரிவித்தார்.
நிறுவனங்களில் காணப்படும் குறைபாடுகளே தற்போதைய நிலைமைக்கு வழிவகுத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எரிவாயு கசிவு வெடிப்புகளை நிவர்த்தி செய்வது தொடர்பாக மிக உயர்ந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். நிறுவனங்கள் தங்கள் உள் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்று அவர் கூறினார்.