பொதுவாக, பெண்கள் லெக்கிங்ஸை அணிந்தாலே நம்மாட்கள் கொலைவெறியுடனும், கொடூர வெறியுடனும்தான் பார்ப்பார்கள்.
அதிலும், நமது கலாச்சார காவலர்கள் கொதித்துப் போயிருப்பார்கள். இந்தவகையானவர்களின் விபியை எகிற வைப்பதற்கென்றே, அமெரிக்காவின் பிரபல ஆடை வடிவமைப்பு நிறுவனமொன்று ஏடாகூடமான ஆடையொன்றை வடிவமைத்துள்ளது.
அமெரிக்காவின், லொலாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள, ஒன்லைன் ஃபாஸ்ட் ஃபஷன் சில்லறை விற்பனை நிறுவனமான, ஃபஷன் நோவா நிறுவனம் இந்த ஆடையை வடிவமைத்து அறிமுகப்படுத்தியுள்ளது.
“நோ சீக்ரெட்ஸ் லெக்கிங் செட்” என பெயரிடப்பட்டுள்ளது அந்த ஆடை.
இந்த ஆடையை அணிவதற்கு பெண்களிற்கு துணிவு அவசியம். காரணம், பெயருக்கு ஏற்றால் போல, அந்த ஆடையை அணிந்தால், அணிபவரின் உடலில் இரகசியங்கள் எதுவும் இருக்காது.
இந்த ஆடைகளுடன் உள்ளாடைகளை அணிய முடியாது.
மொடல் அழகி எரிகா கிடா இந்த ஆடைகளை அணிந்து, அறிமுகப்படுத்தியிருந்தார்.
விரைவில் இந்த ஆடைகள் நம்மூருக்கு வராதா என சில ஜொள்ளர்கள் நப்பாசைப் பட்டாலும், இந்த ஆடை வகைகள் கலாச்சார காவலர்களின் விபியை எகிற வைக்கும் என்பது மட்டும் நிச்சயம்.