இலங்கையின் பொருளாதார நெருக்கடியைத் தணிக்க உதவும் உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு தொடர்பான முன்முயற்சிகள் குறித்து விவாதிக்க இந்தியாவும் இலங்கையும் நான்கு அம்ச அணுகுமுறைக்கு ஒப்புக்கொண்டுள்ளன.
இந்தியாவினால் வழங்கப்பட்ட உணவு, மருந்துகள் மற்றும் எரிபொருள் கொள்வனவுகளுக்கான கடன் வரிகள், இலங்கையின் கொடுப்பனவுச் சமநிலைப் பிரச்சினைகளைச் சமாளிப்பதற்கான நாணய மாற்று ஒப்பந்தம், திருகோணமலை எண்ணெய் குதங்களில் “ஆரம்பகால” நவீனமயமாக்கல் திட்டம் ஆகிய நான்கு தூண்கள் கொண்ட முன்முயற்சி இந்த முடிவுகளில் அடங்கும்.
இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை சந்தித்து கலந்துரையாடினார்.
இதன் பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே மேற்கண்ட விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை இந்தியா அறக்கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்து சமுத்திர மாநாட்டை ஜெய்சங்கர், தொடங்கி வைக்கும் போது, இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவை சனிக்கிழமை அபுதாபியில் சந்திப்பார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.