25.2 C
Jaffna
January 14, 2025
Pagetamil
இலங்கை

நாடளாவிய ரீதியில் பிரச்சாரங்களை ஆரம்பிக்கிறது சு.க!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் அடுத்த வருடத்திற்கான கட்சி சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதாக கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி சிறிசேன,

முன்னாள் நல்லாட்சி அரசாங்கம் செயற்பட்டது போன்று வேறு எந்த நிர்வாகமும் செயற்படவில்லை. முன்னாள் அரசாங்கம் செய்த நல்ல பணிகளை யாரும் பேசுவதில்லை என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி அரசாங்கம் நாட்டுக்கு என்ன செய்தது என்பதை கூற தனி மாநாடு கூட நடத்த முடியும். நல்லாட்சியில் நடந்தவை பற்றி யாரும்  பேசுவதில்லை. எனவும், நல்லாட்சியின் மீது கற்களை மட்டுமே வீசுவதாகவும் தெரிவித்தார்.

‘இந்த நாட்டிற்கு 19வது திருத்தத்தின் மூலம் ஜனநாயகத்தை வழங்கியவன் நான். உலகில் எந்த ஒரு தலைவரும் தனது அதிகாரத்தை அகற்றவில்லை, ”என்று முன்னாள் ஜனாதிபதி கூறினார்.

இந்த வருடத்திற்கான பாராளுமன்ற அமர்வுகள் டிசம்பர் 10 ஆம் திகதி முடிவடைந்த பின்னர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய வேலைத்திட்டம் நாடு முழுவதும் ஆரம்பிக்கப்படும் என முன்னாள் ஜனாதிபதி சிறிசேன தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் தேர்தல்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனித்து போட்டியிடுமா என்பது தொடர்பில் வினவிய போது, ​​தேர்தல் நடத்தப்படும் போது அது குறித்து தீர்மானிக்கப்படும் என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்தார்.

நிலவும் சமூக மற்றும் பொருளாதார பிரச்சினைகளை மையமாக வைத்து சுதந்திரமான பொது பிரச்சாரத்தை முன்னெடுக்க நேற்று கூடிய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட பிரதித் தலைவர் பேராசிரியர் ரோஹன லக்ஸ்மன் பியதாச, இந்த மாத இறுதிக்குள் இது தொடர்பான பிரச்சாரத்தை ஏற்பாடு செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

நேற்றைய சந்திப்பின் போது 2022 வரவு செலவு திட்ட முன்மொழிவு பற்றிய விரிவான பகுப்பாய்வு விவாதங்களைச் சேர்த்து முன்வைக்கப்பட்டது, அதே நேரத்தில் மத்திய குழு உறுப்பினர்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள நிலைமை குறித்து அறிக்கை அளித்தனர்.

தற்போதைய நிலைமையை ஆராய்ந்து பொருத்தமான அரசியல் மற்றும் சமூக பிரச்சினைகளை எட்டுவதற்கும் மத்திய குழு தீர்மானித்துள்ளதாக பேராசிரியர் ரோஹன லக்ஸ்மன் பியதாச தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ரயிலில் தவறவிடப்பட்ட பொருட்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

east tamil

முல்லைத்தீவில் வினோதமான திருட்டு

east tamil

UPDATE: ‘மாமா பணத்தை தராததால் மாணவியை கடத்தினேன்’: மச்சான் கூறிய காரணம்!

Pagetamil

ரோஹிங்கிய முஸ்லிம் தொடர்பில் மீள குற்றப்புலனாய்வு விசாரணை

east tamil

தமிழ் மக்களின் போர்க்கால வாழ்க்கையை ஆவணமாக்கியவர் காலமானார்!

Pagetamil

Leave a Comment