26 C
Jaffna
December 30, 2024
Pagetamil
இலங்கை

வல்வெட்டித்துறையில் சுயேட்சைக்கு ஏற்பட்ட சோக முடிவு: முள்ளை முள்ளாலேயே எடுத்த எதிர்தரப்பு!

வல்வெட்டித்துறை நகர சபையின் வரவு-செலவுத் திட்டம், இரண்டாம் முறையும் இன்றும் (30) ஒரு வாக்கால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறை நகர சபை வரவு-செலவுத் திட்டம் கூட்டம், இன்றும், தவிசாளர் என்.செல்வேந்திரா தலைமையில் நடைபெற்றது.

கடந்த 17ஆம் திகதி, சபையில் முன்வைக்கப்பட்ட வரவு-செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்ட நிலையில், இன்று திருத்தங்களுடன் சபையில் முன்வைக்கப்பட்ட போது, அதுவும் தோற்கடிக்கப்பட்டுள்ளது. வாக்களிப்பின் போது முன்னரைப் போல எதிராக ஒன்பது வாக்குகளும் ஆதரவாக எட்டு வாக்குகளும் கிடைத்தன.

இதனால் ஒரு வாக்கினால் வரவு – செலவுத் திட்டம் மீண்டும் தோல்வி அடைந்தது.

இதனையடுத்து சபைக்கு புதிய தவிசாளர், உபதவிசாளர் தெரிவு செய்யப்பட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறை நகர சபையின் முன்னாள் தவிசாளார் கே. கருணாந்தராசா (76) கொரோனா தொற்றுக்கு உள்ளாகி, கடந்த ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதியன்று உயிரிழந்தார்.

அதனை அடுத்து, வல்வெட்டித்துறை நகர சபையின் வரவு-செலவுத் திட்டம், இரண்டாம் முறையும் இன்றைய தினமும் (30) ஒரு வாக்கால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறை நகர சபை வரவு-செலவுத் திட்டம் கூட்டம், இன்றைய தினம், தவிசாளர் என். செல்வேந்திரா தலைமையில் நடைபெற்றது.

இதன்போது, கடந்த 17ஆம் திகதி, சபையில் முன்வைக்கப்பட்ட வரவு-செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்ட நிலையில், இன்றைய தினம் திருத்தங்களுடன் சபையில் முன்வைக்கப்பட்ட போது, அதுவும் தோற்கடிக்கப்பட்டு உள்ளது. வாக்களிப்பின் போது முன்னரைப் போல எதிராக ஒன்பது வாக்குகளும் ஆதரவாக எட்டு வாக்குகளும் கிடைத்தன.

இதனால் ஒரு வாக்கினால் வரவு – செலவுத் திட்டம் மீண்டும் தோல்வி அடைந்தது.

இதனையடுத்து சபைக்கு புதிய தவிசாளர், உபதவிசாளர் தெரிவு செய்யப்பட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறை நகர சபையின் முன்னாள் தவிசாளார் கே. கருணாந்தராசா (வயது 76) கொரோனா தொற்றுக்கு உள்ளாகி, கடந்த ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதியன்று உயிரிழந்தார்.

அதனை அடுத்து, புதிய தவிசாளராக என். செல்வேந்திரா, கடந்த செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதியன்று, ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார்.

இந்நிலையில் அவரால் முன்வைக்கப்பட்ட இரு வரவு-செலவுத் திட்டமும் தோல்வியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனைடுத்து, கடந்த செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதியன்று புதிய தவிசாளர் தெரிவின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் க.சதீஸ், சுயேட்சை குழு சார்பில் என்.செல்வேந்திரா போட்டியிட்டனர்.

சதீஷ் முன்னர் சுமந்திரனின் கொடும்பாவி எரித்தவர் என கூறி, எம்.ஏ.சுமந்திரன் கட்சி முடிவிற்கு மாறாக செயற்பட்டு தமிழ் தேசிய கூட்டமைப்பை தோல்வியடைய பின்னணியில் செயற்பட்டார். யாழ் மாநகரசபை, வல்வெட்டித்துறை நகரசபை தலைவர்கள் தெரிவில், தமிழ் தேசிய கூட்டமைப்பை தோல்வியடைய செய்ய எம்.ஏ.சுமந்திரன் அரச தரப்பின் பின்னணியில் செயற்பட்டாரா என்ற விமர்சனங்களும் எழுப்பப்பட்டன.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவர் தனக்கு தவிசாளர் பதவி தர வேண்டுமென அடம்பிடித்துக் கொண்டிருந்தார். அவரது ஆசையை பயன்படுத்திக் கொண்ட சுமந்திரன் தரப்பு, கூட்டமைப்பிற்கு எதிராக அவரை கொம்பு சீவிவிட்டனர்.

வாக்கெடுப்பில் அவர் கூட்டமைப்பிற்கு எதிராக வாக்களித்து, கூட்டமைப்பின் வேட்பாளரை தோல்வியடைய வைத்தார்.

இதன்பின்னர், சுமந்திரன் தரப்பு, ஈ.பி.டி.பி கூட்டு ஆதரவுடன் சுயேட்சைக்குழு ஆட்சியமைத்தது.

புதிய கூட்டின் தேனிலவு முடிவதற்குள்ளேயே, சுயேட்சையை கவிழ்த்துள்ளது.

யாரை வைத்து கூட்டமைப்பை தோல்வியடைய சுமந்திரன், ஈ.பி.டி.பி, சுயேட்சை கூட்டு செயற்பட்டதோ, அதே ஆளை வைத்தே, அந்த கூட்டை, எம்.கே.சிவாஜிலிங்கம் தரப்பு தோல்வியடைய வைத்துள்ளதுதான் சுவாரஸ்யமான விடயம்!

தவிசாளர் பதவி கிடைக்கவில்லையென ஒரு உறுப்பினர் கூட்டமைப்பிற்கு எதிராக வாக்களித்திருந்த நிலையில், அடுத்த தவிசாளர் அவர்தான் என உத்தரவாதம் கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த உத்தரவாதத்தின் அடிப்படையில், சுயேட்சைக்குழுவின் வரவு செலவு திட்டத்தை தோற்கடிக்கும் தீர்மானிக்கும் வாக்காக, அந்த உறுப்பினர் செயற்பட்டுள்ளார்.

சுயேட்சைக்குழுவின் இரண்டு வரவு செலவு திட்டங்களும் தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய தவிசாளர் விரைவில் தெரிவு செய்யப்படுவார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

யாழ் வீதியில் சாகசம் காட்டிய தனியார் சிற்றூர்தியின் வழித்தட அனுமதி இரத்து!

Pagetamil

பல்கலைக்கழக வளாகங்களாக மாறும் தேசிய கல்வியியல் கல்லூரிகள்

east tamil

சிகிரியாவுக்காக நிதி உதவியை முன்மொழிந்த கொரிய நிறுவனம்

east tamil

உப்பிற்கு தட்டுப்பாடு இல்லை – டி. நந்தன திலக

east tamil

பெரஹரா யானை தாக்கியதில் ஒருவர் காயம்

east tamil

Leave a Comment