Pagetamil
இலங்கை

முதற் தடவையாக செங்கோலுடன் நடைபெற்ற யாழ் மாநகரசபை அமர்வு!

வரலாற்றின் முதல் தடவையாக யாழ் மாநகரசபையின் அமர்வு செங்கோலுடன் இன்று இடம் பெற்றது.

மாநகர முதல்வர் வி.மணிவண்ணனின் தலைமையில் இன்று காலை இடம் பெற்றுள்ளது.

மாநகர முதல்வரின் வேண்டுகோளுக்கு அமைய அண்மையில் காலமான நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் 10வது நிர்வாக அதிகாரி குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியாரின் நினைவாக நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானம் யாழ்.மாநகர சபைக்கு செங்கோல் ஒன்றினை வழங்கியது.

நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் 11வது நிர்வாக அதிகாரி குமரேஷ் சயந்தன குமாரதாஸ் மாப்பாண முதலியாரின் வடிவமைப்பில் உருவாக்கப்பட்ட செங்கோலுடன் வரலாற்றில் முதல் தடவையாக இன்றைய மாநகர அமர்வு மாநகர முதல்வர் தலைமையில் நடைபெற்றமை குறிப்பிட தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ரின் மீன்கள் விலைக்கான விசேட அறிவிப்பு

east tamil

ஏப்ரலில் உள்ளூராட்சி சபை தேர்தல்

east tamil

தேர்தல் செலவு அறிக்கை தாக்கல் செய்யாதவர்களுக்கான விசாரணை ஆரம்பம்

east tamil

காலி கோட்டையின் பழைய கோட்டை நுழைவாயில்களுக்கு தற்காலிக பூட்டு!

east tamil

கள்ளக்காதலியில் சந்தேகம்; கத்தியால் குத்த முயற்சித்த கள்ளக்காதலன்; தகராறில் 13 வயது சிறுமி பலி

east tamil

Leave a Comment