‘த நைட்’ படத்திற்காக மழை நேரத்தில் டப்பிங் பணிகளில் ஈடுபட்ட சாக்ஷி அகர்வாலின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் சினிமாவில் கவர்ச்சி நாயகியாக வலம் வருபவர் சாக்ஷி அகர்வால், தற்போது ‘த நைட்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். ரங்கா புவனேஷ் இயக்கி வரும் இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் தயாராகிறது. அனிமல் த்ரில்லராக படமாக உருவாகி வரும் இப்படத்தின் கதாநாயகனாக இசையமைப்பாளர் விது நடித்து வருகிறார்.
இந்த படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானல், கேரளா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அடர்ந்த காடுகளில் படமாக்கப்பட்டுள்ளது. தற்போது படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று தயாரிப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பு பணிகளின் ஒருபகுதியாக டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் படத்தில் நடிக்கும் ஒவ்வொரு நடிகர், நடிகைகளும் டப்பிங் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் சாக்ஷி அகர்வாலின் காட்சிகளின் டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது. அதற்காக கொட்டும் மழையன்று பாராமல் வெள்ளம் சூழ்ந்த பகுதியில் உள்ள ஸ்டுடியோவுக்கு சென்று டப்பிங் பணிகளை சாக்ஷி அகர்வால் மேற்கொண்டார். இதன் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
![](https://pagetamil.com/wp-content/uploads/2021/11/sa3-300x138.png)
![](https://pagetamil.com/wp-content/uploads/2021/11/sa2-300x139.png)
![](https://pagetamil.com/wp-content/uploads/2021/11/sa1-300x138.png)