28.1 C
Jaffna
December 21, 2024
Pagetamil
இலங்கை

இரணைமடு குளத்தின் 4 வான்கதவுகள் திறப்பு!

வடமாகாணத்தில் பாரிய குளமான இரணைமடுக் குளத்தின் நான்கு வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன.

கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் ராஜகோபால், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் ஆகியோர் வான் கதவுகளை திறந்து விட்டனர்.

அதிக மழைவீழ்ச்சி காரணமாக இரணைமடு குளத்திற்கான நீர் வரத்து அதிகரித்த காரணத்தினால் இன்று (28) அதிகாலை 6 மணி அளவில் நான்கு வான் கதவுகள் திறக்கப்பட்டது.

மூன்றாம் இலக்க வான்கதவு 6 அங்குலமாகவும், நான்காம் இலக்க வான்கதவு 12 அங்குலமாகவும், ஐந்தாம் இலக்க வான்கதவு 12 அங்குலமாகவும், ஆறாம் இலக்க வான்கதவு 6 அங்குலமாக திறக்கப்பட்டுள்ளது மொத்தமாக 3 அடியாக இரணைமடு குளத்தின் நீர் வெளியேறுகிறது.

இதன் பின்னர் கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் ராஜகோபு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது, ‘குளத்தின் நீர்வரத்து அதிகரித்தமையினால் நான்கு வான் கதவுகள் திறக்கப்பட்டது. இரணைமடு குளத்தின் வெளியேறுகின்ற நீரால் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை’ என தெரிவித்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கொதித்தெழுந்த சிவாஜி!

Pagetamil

யாழில் வீதிக்கு வந்த முதலைக்கு நேர்ந்த பரிதாபம்

Pagetamil

மின் கட்டணங்கள் இடைநிறுத்தம்

east tamil

முட்டையின் விலையில் வீழ்ச்சி

east tamil

கணவர் மீது முறைப்பாடு… விசாரிக்க சென்ற பொலிசாருக்கு கடி: லைக்கா கட்சியில் தேர்தலில் போட்டியிட்ட பெண்ணுக்கு நேர்ந்த கதி!

Pagetamil

Leave a Comment