பிரபல ஜெர்மன் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் ஆய்வுக்கான கையெழுத்துப் பிரதி 15 மில்லியன் டொலருக்கு விற்பனையாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் விற்பனை பாரிஸில் உள்ள கிறிஸ்டியின் ஏல இல்லத்தில் அண்மையில் நடைபெற்றது.
54 பக்க கையெழுத்துப் பிரதியில் சார்பியல் விதி குறித்த அவரது கணக்கீடுகள் இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி, இது மிகவும் அரிதான கையெழுத்துப் பிரதியாக அடையாளம் காணப்பட்டுள்ளது. உலகில் இதுபோன்ற இரண்டு கையெழுத்துப் பிரதிகள் இருப்பதாகக் கூறப்படுகிறது, அவற்றில் ஒன்று பாரிஸில் ஏலம் விடப்பட்டுள்ளது.
கையெழுத்துப் பிரதி 2.4 மில்லியன் முதல் $ 3.5 மில்லியன் டொலர் வரை விற்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் இது 15 மில்லியன் டொலராக உயர்ந்துள்ளது. தொலைபேசி மூலம் ஏலத்திற்கு வந்த பெயர் தெரியாத நபர் ஒருவர் இந்த கொள்முதல் செய்ததாக கூறப்படுகிறது.
அதுவே ஐன்ஸ்டைன் எழுதியவற்றில் ஆக அதிக விலைக்கு விற்கப்பட்ட ஆவணம்.
சுமார் 100 பேர் ஏலத்தில் கலந்துகொண்டனர்.
அந்த 54 பக்க ஆவணம் 1913ஆம் ஆண்டிற்கும் 1914ஆம் ஆண்டிற்கும் இடையே எழுதப்பட்டது.
பெசோவால்தான் அந்தக் கணக்கீடுகள் இன்னமும் இருப்பதாக அதை ஏலத்தில் விற்ற Christie’s நிறுவனம் தெரிவித்தது.
ஐன்ஸ்டைன் அதை வைத்திருக்கமாட்டாராம்.