கட்சி கட்டுப்பாடுகளை மீறி அரசுடன் இணைந்து வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவளித்த 3 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கட்சியில் வகித்த பதவிகளிலிருந்து இடைநிறுத்தியுள்ளதாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ், பைசல் காசிம், ஹாபிஸ் நஸீர் அஹமட் ஆகிய மூவருமே இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன், கட்சியின் தீர்மானத்தைப் புறக்கணித்து நடந்ததற்காக அவர்களிடம் விளக்கம் கோரப்படவுள்ளது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார் என முஸ்லிம் காங்கிரஸின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1