கௌதாரிமுனை கடலில் நேற்று மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
பூநகரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கௌதாரிமுனை கடலில் நேற்று அடையாளம் தெரியாத ஒருவரின் சடலம் மிதந்தது.
பூநகரி பொலிசாரால் மீட்கப்பட்ட சடலம், கிளிநொச்சி பொதுவைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், பாசையூரை சேர்ந்த 42 வயதான ஒருவரின் சடலமே அதுவென அடையாளம் காணப்பட்டுள்ளது. குடும்பத்தினர் சடலத்தை பார்வையிட்டு, உறுதி செய்தனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அரியாலை கடலில் படகொன்றிலிருந்து 229 கிலோகிராம் கேரள கஞ்சா கடற்படையினரால் மீட்கப்பட்டது.
அரியாலை கடலில், படகில் கேரள கஞ்சாவை கொண்டு வந்தவர், கடற்படையினரை கண்டதும், படகிலிருந்து குதித்து நீந்தி தப்பிச் சென்றார். பின்னர் அவர் குறித்த தகவல்கள் எதுவும் தெரிய வரவில்லை.
அவரே சடலமாக கரையொதுங்கினார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
1
+1
+1