திருகோணமலை, கிண்ணியா பகுதியில் குறிஞ்சாக்கேணி பகுதியில் படகு உடைந்து கவிழ்ந்ததில் இதுவரை 6 மரணங்கள் உறுதியாகியுள்ளது. உயிரிழந்தவர்களின் சடலங்கள் கிண்ணியா தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்தும் அங்கும் தேடுதல் பணி நடந்து வருகிறது.
கிண்ணியாவையும் குறிஞ்சாக்கேணியையும் இணைக்கும் பால நிர்மாண வேலைகள் நடப்பதால், தற்காலிகமாக சேவையில் ஈடுபட்ட மோட்டார் இழுவைப் படகு உடைந்து, கவிந்ததில் இந்த அனர்த்தம் நிகழ்ந்தது.
இன்று காலை, பாடசாலை மாணவர்கள், முதியவர்கள் என சுமார் 20 பேர் படகில் பயணம் செய்த நிலையில் இவ்விபத்து நிகழ்ந்தது.
சடலமாக மீட்கப்பட்டவர்கள் பாடசாலை மாணவர்கள் என தெரிய வருகிறது.
What’s your Reaction?
+1
2
+1
+1
+1
+1
+1
+1
5