சீன கரிம உர விவகாரத்தில் அரசாங்கம் பின்வாங்கும் முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீன நிறுவனத்தின் கோரிக்கை தொகையின், 75% மதிப்பை செலுத்தித் பிரச்சனையை தீர்க்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சீனாவால் அனுப்பப்பட்ட உரத்தின் பெறுமதி 8 மில்லியன் அமெரிக்க டொலர்களை தாண்டும் என முதலில் கூறப்பட்ட போதிலும், 6.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்தி பிரச்சினையை தீர்க்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
அதே நிறுவனத்திடம் இருந்து புதிய பங்குகளை கொள்வனவு செய்யவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் தூதரக உறவுகளை மோசமாக்க எங்களால் இடமளிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.
அமைச்சரின் தகவல்படி, சீன நிறுவனம் உரக் கப்பலை திரும்பப் பெறவும், மாதிரிகள் மீது முறையான சோதனைக்குப் பிறகு புதிய பங்குகளை வழங்கவும் ஒப்புக்கொண்டது. பேச்சுவார்த்தை வெற்றியடைந்தால், அடுத்த ஏற்றுமதிக்கான கட்டணத்தில் 50 சதவீதத்தை பகிர்ந்து கொள்ள அரசு தயாராக உள்ளது.
உத்தேச தீர்வுத் திட்டம் அமைச்சரவையின் ஒப்புதலுக்கு சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.