கொழும்பு 7ல் உள்ள ரேஸ்கோர்ஸ் கட்டிடத்தில் உள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்து வாயு கசிவு காரணமாக ஏற்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த வெடிப்பு மற்றும் தீயானது வெடிமருந்துகளின் விளைவுகள் அல்ல என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ உறுதிப்படுத்தியுள்ளார்.
சர்வதேச துரித உணவு உரிமையாளருக்கு சொந்தமான உணவகத்தில் வெடிப்புச் சம்பவம் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
கொழும்பு மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினரும் பொலிஸாரும் இணைந்து தீயை அணைத்துள்ளனர்.
எல்பி எரிவாயு குழாய் வெடித்து, தொழிற்சாலை குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் உணவு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் உயர் வெப்பநிலை உபகரணங்களுடன் தொடர்பு கொண்டதன் விளைவாக வெடிப்பு மற்றும் தீ விபத்து ஏற்பட்டதாக அரசாங்க ஆய்வாளர் தீர்மானித்தார்.
கொழும்பு தெற்கு பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் மேற்பார்வையில் கறுவாத்தோட்ட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பொலிசார் விசாரணையின் முன்னேற்றத்தை நீதிமன்றத்திற்கு தெரிவித்தனர்.
இந்த வெடிவிபத்தில் அருகில் டாக்ஸிக்காக காத்திருந்த இரண்டு இளைஞர்கள் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இளைஞர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலையத்திற்கு வந்து வாக்குமூலம் பதிவு செய்துள்ளார்.