முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மாவீரர் வாரத்தை அல்லது மாவீரர் நிகழ்வினை அனுஸ்டிப்பதற்கு முல்லைத்தீவு நீதிமன்றம் ஊடாக பொலிசார் இன்று (17) தடையுத்தரவு பெற்றுள்ளனர்.
குறித்த தடை உத்தரவானது 12 பேருக்கு எதிராக பெறப்பட்டுள்ளது. அதில் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்தரன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர்கள் எம்.கே.சிவாஜிலிங்கம், துரைராசா ரவிகரன், சமூக செயற்பாட்டாளர் முத்துராசா சிவநேசராசா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன், சமூக செயற்பாட்டாளர் தம்பையா யோகேஸ்வரன், சமூக செயற்பாட்டாளர் இசிதோர் அன்ரன் ஜீவராசா, முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்க தலைவி மரியசுரேஷ் ஈஸ்வரி, சமூக செயற்பாட்டாளர் பேதுருப்பிள்ளை ஜெராட், சமூக செயற்பாட்டாளர் வி.விக்னேஸ்வரன், பீற்றர் இளஞ்செழியன் ஆகியோரது பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.