தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர், மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனுக்கு கொவிட்-19 தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அன்டிஜன் பரிசோதனையின் மூலம் தனக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மனோ கணேசன் இன்று (17) பிற்பகல் சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்தார்.
நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் மனோ கணேசன் கலந்து கொள்ளவில்லை. அண்மை நாட்களாக பாராளுமன்ற அமர்விலும் கலந்து கொள்ளவில்லை.
கடந்த 11ஆம் திகதி முதல் மனோ கணேசன் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1