29.3 C
Jaffna
April 13, 2025
Pagetamil
சினிமா

நடிகர் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

நீலாங்கரையில் உள்ள நடிகர் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னையை அடுத்த நீலாங்கரை பகுதியில் நடிகர் விஜய், குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம தொலைபேசி அழைப்பு வந்தது.

அதில் பேசிய நபர், நீலாங்கரையில் உள்ள நடிகர் விஜய் வீட்டில் வெடிகுண்டு வைத்து இருப்பதாகவும், இன்னும் சற்று நேரத்தில் அது வெடித்து சிதறும் எனவும் கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.

இதையடுத்து நீலாங்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் தலைமையிலான போலீசார், வெடிகுண்டு நிபுணர்களுடன் நீலாங்கரையில் உள்ள நடிகர் விஜய் வீட்டுக்கு சென்று அங்குலம் அங்குலமாக சோதனை செய்தனர். ஆனால் நீண்டநேரம் தேடியும் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. பின்னர்தான் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது.

இதையடுத்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த மர்ம தொலைபேசி எண்ணை வைத்து போலீசார் விசாரித்தபோது, விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர், விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை சேர்ந்த மனநிலை பாதிக்கப்பட்ட வாலிபர் என தெரியவந்தது. அந்த வாலிபரை பிடித்து மனநல காப்பகத்தில் சேர்க்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இவர், ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக இருந்தபோது அவரது வீட்டுக்கும், மேலும் நடிகர்கள் அஜித்குமார், சரத்குமார் வீட்டுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து உள்ளதுடன், நடிர் விஜய் வீட்டுக்கு தற்போது 2வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்

ஒரு பாடலுக்கு மீண்டும் நடனமாடும் தமன்னா!

Pagetamil

அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் – இது ‘ஹாலிவுட்’ லெவல்!

Pagetamil

‘மஞ்சும்மல் பாய்ஸ்’ சாதனையை முறியடித்த ‘எம்புரான்’!

Pagetamil

குடும்ப வன்முறை வழக்கை ரத்து செய்ய கோரி ஹன்சிகா மனு

Pagetamil

‘திருமணமான ஆணுடன் தொடர்பு வைக்க மாட்டேன்’: ஜி.வி.பிரகாஷுடனான உறவை மறுக்கும் நடிகை திவ்யபாரதி!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!