மக்கள் விடுதலை முன்னணியின் 32வது கார்த்திகை வீரர்களின் ஞாபகார்த்த நிகழ்வு இன்று (14) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
அரியாலையிலுள்ள, மக்கள் விடுதலை முன்னணியின் அலுவலகத்தில் இடம்பெற்றது.
கட்சியின் யாழ்ப்பாண அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரம் இது தொடர்பில் தெரிவிக்கையில்,
கார்த்திகை வீரர்களின் ஞாபகார்த்தம் என்பது 1989 நவ 13 ஆம் திகதி எமது கட்சியின் ஸ்தாபகர் தோழர் ரோகண விஜேவீர, பிரதான செயலாளர் தோழர் உபதிஸ்ஸ கமநாயக்க உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான தோழர் தோழியரை அன்றைய ஆட்சியாளர் ஐக்கிய தேசியக் கட்சியின் கொலைகாரர்களால் படுகொலை செய்யப்பட்டு 32 வருடங்கள் ஆகின்றது. அதை நினைவுகூருமுகமாக நாங்கள் ஒவ்வொரு வருடமும் நாடு தழுவியரீதியில் நினைவுகூர்ந்து வருவது வழக்கம் ஆனால் யாழ்ப்பாணத்தில் இதுவே முதற்தடவையாக இடம்பெறுகிறது என்றார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1