கைதான இந்திய மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு!

Date:

அண்மையில் கைது செய்யப்பட்ட எல்லை தாண்டிய இந்திய மீனவர்களுக்கு 15 ம் திகதிவரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் இடம் பெற்ற விசாரணைகளை அடுத்தே பருத்தித்துறை நீதிமன்றம் இவ் உத்தரவை வழங்கியுள்ளது.

இம் மீனவர்கள் 23 பேர் சார்பிலும் இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் சட்டத்தரணி லோ.குகதாஸ் ஆஜராகியிருந்தார்.

கைது செய்யப்பட்ட 23 மீனவர்களுக்கெதிராகவும் எல்லை தாண்டிய மீன் பிடியில் ஈடுபட்டமை, தடை செய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களை பயன் படுத்தக்கூடிய நிலையில் வைத்திருந்தமை, அனுமதி பத்திரமின்றி மீன்பிடியில் ஈடுபட்டமை போன்ற மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி எதிர்வரும் 15ஆம் திகதி வரை வழக்கை ஒத்திவைத்ததுள்ளார்.

இம் மீனவர்கள் வழக்கு விசாரணைகளுக்கு யாழ் இந்திய துணை தூதாக அதிகாரிகளும் சமூகமளித்திருந்தனர்.

இந்திய மீனவர்களுக்காக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சி சார்பில் சட்டத்தரணி ஜோய் மகாதேவாவும் ஆஜராகியிருந்தார்.

spot_imgspot_img

More like this
Related

பெங்களூருவில் பெற்றோரை கொன்றுவிட்டு தப்பிச் சென்ற மகள் புதுச்சேரியில் கைது

பெங்களூருவில் காதல் மற்றும் கடன் விவகாரத்தில் தாய், தந்தை, தங்கையை காதலனுடன்...

யாழில் வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்

தமக்கான வேலை வாய்ப்பில் அநீதி இழைக்கப்படுவதைக் கண்டித்தும் உடனடியாக வேலை வாய்ப்பை...

“என்னை எங்கேயும் தேட வேண்டாம்..!” – விஜய்யின் குட்டி கதைக்கு மு.க.ஸ்டாலின் பதில்

தமிழக சட்டப்பேரவையில் விஜய் சொன்ன ‘அப்பாவைக் காணோம்’ குட்டிக் கதை கடும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்