அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் செயற்கைக் கருத்தரிப்பு முறையின்போது தவறான கரு செலுத்தப்பட்டதாக ஒரு தம்பதியினர் வழக்குத் தொடுத்துள்ளனர்.
2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், டாஃப்னா – அலெக்சண்டர் கார்டினெல் தம்பதிக்குப் பெண் குழந்தை பிறந்தது.
ஆனால், அந்தக் குழந்தை பார்ப்பதற்குத் தங்களைப் போல் இல்லை என அவர்கள் கருதினர். காரணம், குழந்தை கருப்பாக இருந்தது.
மரபணுச் சோதனையின்போது, அவர்களின் சந்தேகம் உண்மையானது.
டாஃப்னா – அலெக்சண்டர் கார்டினெல் தம்பதியின் கரு பிறிதொரு பெண்ணின் கருப்பையில் செலுத்தப்பட்டு, அந்த தம்பதியினரின் கரு, டாஃப்னாவின் கருப்பையில் செலுத்தப்பட்டுள்ளது. அந்த சிகிச்சை நிலையத்தின் அலட்சியத்தால் இது நிகழ்ந்தது.
லொஸ் ஏஞ்சல்ஸை தளமாகக் கொண்ட கலிபோர்னியா இனப்பெருக்க சுகாதார மையம் (சிசிஆர்ஹெச்) மற்றும் அதன் உரிமையாளர் வைத்தியர் எலிரன் மோர் ஆகியோர் மருத்துவ முறைகேடு, ஒப்பந்த மீறல், அலட்சியம் மற்றும் மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். இது ஜூரி விசாரணையைக் கோருகிறது.
நான்கு பெற்றோரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணி ஆடம் வுல்ஃப் கூற்றுப்படி, இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மற்றைய இரண்டு பெற்றோர்களும் அநாமதேயமாக இருக்க விரும்புகிறார்கள். ஆனால் வரும் நாட்களில் இதேபோன்ற வழக்கைத் தாக்கல் செய்ய விரும்புகிறார்கள்.
தவறாக மாற்றப்பட்ட கருக்களின், இரண்டு பெண் குழந்தைகளும் செப்டம்பர் 2019 இல் ஒரு வார இடைவெளியில் பிறந்தன. இரு தம்பதியினரும் அறியாமல் கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு தவறான குழந்தையை வளர்த்தனர். டிஎன்ஏ சோதனைகள் கருக்கள் மாற்றப்பட்டதை உறுதிப்படுத்தியது என்று தாக்கல் கூறுகிறது.
தமது சொந்தக் குழந்தையைச் சுமக்கும் வாய்ப்பு பறிக்கப்பட்டதாக டாஃப்னா கவலை தெரிவித்துள்ளார்.